சினிமா

வெற்றி பூரிப்பில் மூழ்கிய அப்பாவுக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த வேறலெவல் பரிசு என்னனு பார்த்தீர்களா!!

Summary:

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி மிகவும் விறுவிற

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் திமுக 156 தொகுதியில் முன்னிலை வகித்தது. மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில் பல முக்கிய பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து வெற்றி பூரிப்பில் இருக்கும் தனது தந்தை ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை பரிசாக கொடுத்துள்ளார்.

அதாவது இதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்லுமிடமெல்லாம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக கூறி ஆட்சியில் இருந்தவர்கள் இந்த செங்கலைதான் நட்டு வைத்திருந்தனர் என எடுத்துச் சென்று மக்களிடம் காண்பித்தார். இந்நிலையில் செங்கலை திருடிவிட்டார் என அவர் மீது பாஜகவினர் புகாரும் அளித்திருந்தனர். அந்தச் செங்கல்லையே அவர் வெற்றி பெற்ற தனது தந்தைக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


Advertisement