சினிமா

ஜோசப் விஜய் ரசிகன் தாண்டா நான்.. என்னடா இப்ப?.. ட்விட்டரில் மதச்சண்டை..!

Summary:

ஜோசப் விஜய் ரசிகன் தாண்டா நான்.. என்னடா இப்ப?.. ட்விட்டரில் மதச்சண்டை..!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகனாக இருப்பவர் இளைய தளபதி விஜய். இயக்குனரின் மகனாக திரையில் அடியெடுத்து வைத்திருந்தாலும், தனது ஓயாத உழைப்பு மற்றும் குணத்தால் இன்று தனக்கென தனியொரு ரசிகர் பட்டாளத்தையே விறல் நுனியில் வைத்துள்ளார். 

சமீப காலங்களாகவே விஜய் மக்கள் மன்றம் தொடர்பாக நடந்த பிரச்சனை, ரசிகர்கள் அரசியலுக்கு இழுத்ததால் வந்த பிரச்சனை, இறக்குமதி செய்யப்பட்ட கார் வரிவிலக்கு வழக்கு என்று பல பிரச்சனைகளில் சிக்கியிருந்தார். இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில், அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் ரசிகர்களுக்குள் சண்டை ஏற்பட்டு, காதில் கேட்க இயலாத வார்த்தைகளை எழுதி விமர்சிப்பது வழக்கமான நிகழ்வாகிப்போய்விட்டது. அன்றைய காலங்களில் ரஜினி - கமல் ரசிகர்கள் திரையரங்கில் அடிதடி சண்டை என்று இருந்து வந்த நிலையில், இன்று ட்விட்டர் தளத்தில் அது தரம்கெட்ட வார்த்தை போராக மாறிவிட்டது. 

தற்போது, சமூக வலைத்தளத்தில் #ஜோசப்விஜய் என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ட்விட்டர் பதிவுகளில், நடிகர் விஜயின் ரசிகர்கள் எங்களுக்கு ஜாதி மத பேதம் கிடையாது என்பதை உணர்த்தும் பொருட்டு, ஜோசப் விஜயின் ரசிகராக இருப்பதால் நாங்கள் எந்த பேதத்தையும் பார்ப்பது இல்லை என்பதை போல பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்க்கருத்து பதிவுகளும் வைரலாகி வருகிறது.

மேலும், விஜயின் சமுதாயம் குறித்து பேசுகையில் அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றாற்போல பேசிய நிகழ்வும் நடந்துள்ளது. ஜோசப் விஜய் என்று பெயர் வைத்துள்ள நடிகர் விஜய் எப்படி எந்த மதத்திற்கு சொந்தக்காரர் என எதிர்கருத்துகள் எழுந்து வரும் நிலையில், அவர் தமிழன், இந்தியன் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement