அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
குஷ்பூ கையில் இருக்கும் இந்த குட்டி குழந்தை எந்த பிரபல நடிகை.? வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் 90களின் தொடக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் குஷ்பூ குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது போன்ற நிலையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கிழக்கு சீமையிலே. பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் படம் தான் குஷ்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் இப்படத்தில் குஷ்பூ ஒரு குழந்தையை கையில் வைத்திருந்தார் .அந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபர் தான் அந்த குழந்தை என்ற தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.