த்ரிஷாவும், ரோலக்ஸும் கூட்டாளிகளா.? த்ரிஷாவால் லீக்கான லியோ பட கதை.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படத்தில் விஜய்- திரிஷா கூட்டணி, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். 2006ஆம் ஆண்டு 'ஆதி' படத்தில் தான் கடைசியாக இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
முன்னதாக கில்லி, குருவி உள்ளிட்ட படங்களிலும் விஜய் - த்ரிஷா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மீண்டும் தற்போது 'லியோ' படத்தில் தான் இருவரும் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் கேரக்டரில் மிரட்டியிருப்பார். அதில் ரோலக்ஸ் போட்டிருந்த தேள் டாட்டூவை போல், லியோ படத்திலும் ஒரு தேள் சிம்பல் வந்தது. அதைப் பார்த்து ரோலக்சின் அண்ணன் தான் லியோ என்றெல்லாம் கதை கட்டினர்.
தற்போது, த்ரிஷாவின் கையிலும் தேள் டாட்டூ இருப்பதைப் பார்த்த மீம் கிரியேட்டர்கள், த்ரிஷாவும், ரோலெக்ஸும் கூட்டாளிகள். எனவே த்ரிஷா லியோவில் விஜய்க்கு துரோகம் என்று புதுசு புதுசாக கதை கட்டி வருகிறார்.