சினிமா

நடிகை த்ரிஷாவிற்கு என்னாச்சு! ஏன் இந்த திடீர் முடிவு? செம ஷாக்கில் ரசிகர்கள்!

Summary:

Trisha remove some photos from instagram

தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் நடிகை திரிஷா. இந்நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது அவரது கைவசம், சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் போன்ற  திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லாக்டவுனில் வீட்டிலிருந்த நடிகை த்ரிஷா டிக்டாக்கில் இணைந்து செம பிஸியாக இருந்தார். மேலும் அந்த டிக்டாக் வீடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், புகைப்படங்கள் என  அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். பின்னர் நாளடைவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாவில் பதிவுகளை வெளியிடுவதை குறைத்து கொண்ட திரிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். மேலும் தற்போது வெறும் 7 புகைப்படங்கள் மட்டுமே உள்ளது.

    


Advertisement