சினிமா

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக.. கொள்ளை அழகில் பார்வையாளர்களை வியக்கவைத்த இந்த நமீதா யார் தெரியுமா?

Summary:

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக.. கொள்ளை அழகில் பார்வையாளர்களை வியக்கவைத்த இந்த நமீதா யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் ஆரம்பமாகியுள்ளது. இதில் நடிகர், நடிகைகள், மாடலிங் துறையை சேர்ந்தவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், பாடகர்கள், தொகுப்பாளர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த புதுமுகங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த சீசனில் நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இன்ஜினியரிங் படித்து வந்த அவர் 2011ஆம் ஆண்டு திருநங்கையாக மாறியுள்ளார். இதனால் படிப்பை தொடர முடியாத அவர் மாடலிங் துறையில் களமிறங்கி பட்டையை கிளப்பியுள்ளார்.

மிஸ் சென்னை, மிஸ் பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் வென்றுள்ளார். 2018-ல் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். மேலும்
ஸ்பெயினில் நடந்த மிஸ் ட்ரான்ஸ் அழகி போட்டியில் முதன்முதலாக இந்தியா சார்பாக கலந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளார். மேலும் நமீதா சமுத்திரக்கனியின் நாடோடி 2 படத்திலும் நடித்துள்ளார். 


Advertisement