விஜய் பட இயக்குனருக்கு, நடுரோட்டில் போலீசாரால் நேர்ந்த பெரும் அவமானம்!! மறுநாளே நடந்த ஆச்சரியம்!!

விஜய் பட இயக்குனருக்கு, நடுரோட்டில் போலீசாரால் நேர்ந்த பெரும் அவமானம்!! மறுநாளே நடந்த ஆச்சரியம்!!


traffic police insult vijay movie director

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த திருமலை, ஆதி, மற்றும் சுள்ளான் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ரமணா. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சினிமா துறையில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

இந்நிலையில் ரமணா நேற்று முன்தினம் பட்டினப்பாக்கம் சிக்னல் வளைவில் செல்லும்போது விதிகளை மீறியதாக கூறி போலீசாரால் நிறுத்தப்பட்டுள்ளனர் . மேலும் அப்பொழுது ரமணா தான் சரியாகத்தான் வந்தேன். விதிகளை மீறவில்லை என கூறியுள்ளார். அப்பொழுது உதவி ஆய்வாளர் குமார் என்பவர்  ஏய், தள்ளி நின்னு பேசுடா மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும் என கூறியுள்ளார். மேலும் மற்றொருவர் பாதியிலேயே சாவப் போறவனயெல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற? என்று கேட்டுள்ளார்.

cancer மேலும் அவ்வாறு பேசுவது தவறு என கூறியும் அவர்கள் அப்படித்தாண்டா பேசுவேன் என கூறியுள்ளனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி சென்றுள்ளார். இதுகுறித்து இயக்குனர் ரமணா மிகவும் வருத்ததுடன் தனது சமூகவலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

cancer

இந்நிலையில்  இன்று இயக்குனர் ரமணா தனது பதிவில்,  இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, K. ஷோபனா என்னது வந்து மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து வருத்தம் தெரிவித்தனர். மேலும் துணை கமிஷனர் பெரோஸ் கான் அப்துல்லா என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார்.

இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த முகநூல் நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்திருந்தார்.