சினிமா

இந்த வருடத்தின் டாப் 10 படங்கள் எவை?? பட்டியலை வெளியிட்ட பிரபல திரையரங்கம். முதல் இடம் எந்த படம் தெரியுமா?

Summary:

Top tamil movies 2019 list released by vetri theaters

இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே மிகப்பெரிய படங்கள் வெளியாகி நல்ல ஓப்பனிங் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்கள் மெஹா ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தன.

அதனை அடுத்து வந்த காஞ்சனா, தடம், அவெஞ்சர்ஸ், லயன் கிங் ஆகிய படங்களும் நல்ல வசூல் செய்தன. சமீபத்தில் ஜெயம் ரவியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய திரையரங்கமான வெற்றி திரையரங்கம் இந்த வருடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற டாப் 10 படங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் தான் இந்த 2019ல் அதிக வசூல் கொடுத்த படமாம். அடுத்ததாக சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மற்ற படங்களின் விபரங்கள் இதோ. 


Advertisement