சினிமா

அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கும் அழகிய இளம் பெண்..! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ.!

Summary:

Tik tok girl looks like actress nayanthara video goes viral

இளம் பெண் ஒருவர் பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்தபிறகு எந்த ஒரு இடத்திலும் நடைபெறும் வினோதமான சம்பவங்கள், காட்சிகள் உடனே இணையத்தில் வைரலாகிவிடுகிறது. அந்த வகையில் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட டிக் டாக் செயலி மூலம் தங்கள் திறமையை கொண்டு வெளியுலகில் பிரபலமானவர்கள் ஏராளம்.

அந்த வகையில் டிக் டாக் செயலியில் வீடியோ வெளியிட்ட இளம் பெண் ஒருவர் பார்ப்பதற்கு அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கிறார். பலரும் நீங்கள் நயன்தாரா போலவே இருப்பதாக அந்த பெண்ணிற்கு கமெண்ட் செய்ததை அடுத்து, தற்போது பிரபல மேக்கப் கலைஞர் ஒருவர் அந்த இளம் பெண்ணிற்கு நயன்தாரா போலவே மேக்கப் போட்டு அசத்தியுள்ளார்.

விஸ்வாசம் படத்தில் வரும் நயன்தாரா போன்று பட்டு சேலை மற்றும் நகைகளுடன் கூடிய மேக்கப்பில் இருக்கும் அந்த பெண் பார்ப்பதற்கு அப்படியே நயன்தாரா போன்றே உள்ளார்.


Advertisement