சினிமா

அழகான மனுஷன்! செம ஹேப்பியாக யங் ஹீரோ துருவ் வெளியிட்ட செல்பி! கூட இருப்பது யார்னு பார்த்தீங்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது திறமையால் முன்னேறி ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்பட

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது திறமையால் முன்னேறி ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து  தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று அதனை சிறப்பாக நடிக்கக்கூடிய அவருக்கென தற்போது ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அதுமட்டுமின்றி வில்லனாக அவதாரம் எடுத்த அவர், ரஜினியின் பேட்ட மற்றும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி கைவசம் தற்போது துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஏராளமான படங்கள் உள்ளன. மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இளம் நடிகரும், பிரபல நடிகர் சியான் விக்ரமின் மகனுமான துருவ் விக்ரம் விஜய்சேதுபதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் அவர், இந்த அழகான மனிதரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் ஹேப்பியாக பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement