சினிமா

மெகாஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்..! ஹைடெக்காக உருவாகும் படம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Summary:

Thuppaki 2 movie update

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். பட பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் கோடைவிடுமுறைக்கு படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட புகழ் மாளவிகா மோகன் நடித்துள்ளார்.

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து பெண் இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் விஜய் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், விஜய் அடுத்ததாக AR முருகதாசுடன் மீண்டும் இணைய உள்ளதாகவும், இவர்கள் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற துப்பாக்கி படத்தின் 2 ஆம் பாகம் உருவாக உள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளியாகிவருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement