கொரோனாவால் உயிரிழந்த பிரபல தமிழ் நடிகர்! வேதனையுடன் இரங்கல் தெரிவிக்கும் திரையுலகத்தினர்!!

கொரோனாவால் உயிரிழந்த பிரபல தமிழ் நடிகர்! வேதனையுடன் இரங்கல் தெரிவிக்கும் திரையுலகத்தினர்!!


thoratti movie actor dead by corono

நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு மக்கள் பெருமளவில் அவதிப்பட்டனர். 

மேலும் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை உயிரிழக்கும் துயரமும் நேர்ந்து வருகிறது. இந்நிலையில் தொரட்டி படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான 43 வயது நிறைந்த ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

corono

2019-ஆம் ஆண்டு வெளிவந்து மக்களிடையே வரவேற்பை பெற்ற  திரைப்படம் தொரட்டி. அந்த படத்தின் ஹீரோவான ஷமன் மித்ரு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடமும் பெரும் பாராட்டுகளை பெற்றார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக  சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,