ஷாக் நியூஸ்.. சினிமாவிற்கு தடை.. தியேட்டரே இல்லாத கிராமம்.. அதுவும் நம் தமிழகத்தில்..!thoothukudi-kayalpatnam-no-theatre

 

திரைப்படங்களில் வரும் கதைகள் முழுவதும் பொய்யும் கிடையாது, முழுவதும் உண்மையும் கிடையாது. அவை உண்மை கலந்த பொய் ஆகும். நமது ஊரில் பல்வேறு வித்தியாசமான கிராமங்களில் இருக்கும். 

முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் வருவதைப் போல போட்டோ எடுப்பது மரணத்தை தரும் என்ற அச்சத்திலும் இருந்த மக்கள் ஏராளம். பிற்காலத்தில் அவை விழிப்புணர்வால் மாறின. 

cinema news

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் கிராமத்தில் திரையரங்கே இல்லாத சூழல் இன்றும் தொடருகிறது. அதாவது இஸ்லாமிய வரலாற்றை கொண்ட அந்த ஊரில், கிபி 642-ல் இஸ்லாத்தை பரப்ப வந்த குழு காயல்பட்டினத்தில் முகாமிட்டு பின்னர் மக்களுடன் வாழ்ந்துள்ளனர். 

இந்த பகுதியில் இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் திரைப்படங்கள் பார்ப்பது இல்லை. இசைகளை கேட்பது இல்லை. இதனால் இந்த ஊரில் திரையரங்கம் இல்லை. 

cinema news

ஊரில் உள்ள ஆண்களும் இஸ்லாமிய சட்டப்படி திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த சட்டம் அமலில் இருக்கிறது. 

இவர்கள் திரைப்படம் பார்க்க ஆசைப்பட்டால் உறவினர்கள் இருக்கும் வேறு கிராமத்திற்கு சென்று, அங்குள்ள திரையரங்கில் படம் பார்த்து விட்டு மறுநாள் வருவது வழக்கம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.