ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
இதனால்தான் ஆர்யனை திருமணம் செய்தேன்.! உண்மையை போட்டுடைத்த ஷபானா.!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் பிரபலமானவர்தான் நடிகை ஷபானா. கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நெடுந்தொடர் வெற்றிகரமாக 5 வருடங்கள் ஒளிபரப்பானது. சென்ற வருடம் இந்த நெடுந்தொடர் முடிவுக்கு வந்தது. செம்பருத்தி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனை ஷபானா காதலித்து வந்தார்.
இவர்களின் காதல் விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், இருவரும் சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்சமயம் ஷபானா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி தொடரிலும், ஆர்யன் ஜீ தமிழ் தொலைக்காட்சியிப் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரிலும் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான், அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஷபானா, நான் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால், சீரியலில் பொட்டு வைத்து நடிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதனால், ஒரு வருடம் என்னிடம் பேசாமலிருந்தார்கள். அதேபோல் இந்து பையனை காதலிப்பதை என் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தினமும் எதாவது பிரச்சனை செய்து, டார்ச்சர் செய்தார்கள்.
ஆனால் என் ஆழ்மனதில் இந்து பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன்படி ஆர்யனை திருமணம் செய்துகொண்டேன் என தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.