உடலுறவுக்கு பின் ஒரு வாய் உணவு கூட கொடுக்கவில்லை - கண்ணீர் மல்கும் நடிகை ஸ்ரீ ரெட்டி!

உடலுறவுக்கு பின் ஒரு வாய் உணவு கூட கொடுக்கவில்லை - கண்ணீர் மல்கும் நடிகை ஸ்ரீ ரெட்டி!


they-did-not-provide-food-at-all-said-sri-reddy

தன்னை படுக்கைக்கு பயன்படுத்திய திரையுலகினர் உணவு கூட கொடுக்காமல்  தன்னை வெறுங்கையோடு அனுப்பினார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

 சமீபகாலமாக நடிகைகளை படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளதாக சர்ச்சையை கிளப்பி வந்தார் .

மேலும் தற்போது அவரது கவனம் தமிழ் பக்கம் திரும்பி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்  தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 

Latest tamil news
 
அந்நிலையில், இயக்குனர் வாராகி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளர். அதில், நடிகை ஸ்ரீரெட்டி தன்னை திரைத்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 மேலும், இவரே சம்மதித்து பலரிடம் உடலுறவு வைத்து கொண்டதால் இவர் மீது விபச்சார  வழக்கும், மிரட்டி பணம் பறிக்கும் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

Latest tamil news
 
இந்நிலையில், இதற்கு ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது “நான்  மிகவும் வருத்தத்துடன் இருக்கிறேன். எனக்கு இது பழக்கப்பட்டதுதான். பட புரமோஷனுக்காக இதை செய்துள்ளீர்கள்.உங்கள் படம் வெற்றி பெற்றால் அது எனக்கு மகிழ்ச்சிதான்.

மேலும் ஒரு பெண் தாங்கிக்கொள்ள முடியாத புகாரை என் மீது சுமத்துகிறீர்கள். நான் ஒருவரிடமிருந்தும் ஒரு பைசா பணம் கூட பெறவில்லை. உங்களை மறக்க மாட்டேன். நான் யாரையாவது மிரட்டி பணம் பறித்தேன் என்பதாய் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்,உடனே நான் என் தலையை வெட்டி கொள்கிறேன்.

படுக்கையை பகிறும் விபச்சாரிகள் கூட பணத்தை பெறுவார்கள். ஆனால், என்னுடன் உடலுறவு வைத்துவிட்டு உணவு கூட வழங்காமல் என்னை வெறும் வயிற்றோடு அனுப்பினர். நான் நடிகர் சங்கத்தின் அப்பாயின்மெண்டுக்காக காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.