தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறப்பு! எந்த படம் முதலில் வெளியாகிறது? ரசிகர்கள் ஆவல்

தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறப்பு! எந்த படம் முதலில் வெளியாகிறது? ரசிகர்கள் ஆவல்


Theaters reopen in Tamil Nadu from November 10

வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் போன்றவை கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைத்துறையை சார்ந்த பலரும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு ஊரடங்கு உத்தரவின்போதும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துவரும்நிலையில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்கை திறக்க உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்தியாவில் சில மாநிலங்களில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.

corona

ஆனால் தமிழகத்தில் இதுவரை திரையரங்குகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில்  தமிழகத்திலும் தியேட்டர்களை திறக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்கை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீண்ட நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாவதற்கு தயாராக உள்ளது. குறிப்பாக விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாக தயாராக இருக்கும் நிலையியல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட இருப்பதால் புது படங்களை திரையரங்கிற்கு சென்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.