அடஅட! வேறலெவல்! ஹாலிவுட் ஹீரோக்களை சும்மா தெறிக்கவிடும் நடிகர் தனுஷ்! வைரலாகும் மாஸ் வீடியோ!!

அடஅட! வேறலெவல்! ஹாலிவுட் ஹீரோக்களை சும்மா தெறிக்கவிடும் நடிகர் தனுஷ்! வைரலாகும் மாஸ் வீடியோ!!


the-grey-man-mas-action-video-viral

தமிழ் சினிமாவில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகியோர் இயக்கியுள்ளனர். படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் பிரமோஷன் பணிக்காக தி கிரே மேன் பட இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்த மாஸான சண்டைக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் ஹீரோக்களையே அடித்து தெறிக்க விட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் தனுஷ் மாஸ் காட்டுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.