இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் 50.! கதைக்களம் இதுவா.! வெளிவந்த அசத்தலான அப்டேட்!!

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் 50.! கதைக்களம் இதுவா.! வெளிவந்த அசத்தலான அப்டேட்!!



thaush-50-movie-update

தமிழ்  சினிமாதுறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம்  மற்றும் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  நடித்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றிவாகை சூடிய நிலையில் தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையில் கேப்டன் மில்லர்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்த திரைப்படம் டிசம்பர்  15 ஆம் தேதி  வெளியாக உள்ள நிலையில், தனுஷ் தனது 50வது படத்தை  தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிப்பதாக தகவல் வெளிவந்தது.

Thanush 50

தனுஷ் 50 படம் வட சென்னையை  மையமாகக் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றது. இதன் படப்பிடிப்பை  இன்னும்  30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று  படக்குழு முடிவு எடுத்து  அதற்காக தீவிரமான பணிகள் நடைபெற்று வருகின்றதாம்.