என் கனவு நினைவாகிருச்சு! செம ஹேப்பியில் பிக்பாஸ் தர்ஷன்! இணையத்தை கலக்கும் டீசர் இதோ!

என் கனவு நினைவாகிருச்சு! செம ஹேப்பியில் பிக்பாஸ் தர்ஷன்! இணையத்தை கலக்கும் டீசர் இதோ!


tharshan-album-song-reaser-released

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ்  ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷன். இவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார். 

ஆனாலும் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் நடிகர் கமலும் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்சனை நடிக்க வைக்க இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்  தர்ஷன் தற்போது  இசை ஆல்பம் ஒன்றில்  நடித்துள்ளார். 

தாய்க்கு பின் தாரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தில் தர்ஷனுடன் இணைந்து சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார். ஆயிஷா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்த இசை ஆல்பத்தின் பாடல்களை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும் இதற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் நடித்ததன் மூலம் தனது கனவு நனவாகியுள்ளதாக தர்சன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இதன் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.