அடேங்கப்பா.. இவ்வளவா!மாபெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் தனுஷின் அந்த படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!thanush telungu movie going to make in 120 crores

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்மையில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் உள்ளன.

தனுஷ் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திற்கான சூட்டிங்கில் பங்கேற்று வந்தார். மேலும் இவர் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என செம பிஸியாக இருக்கும் தனுஷ் தற்போது தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளதால் அதிக பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனராம்.

danushஅதாவது அந்த படம் 120 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷுக்கு மட்டும் 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.