நான் நம்பிய அந்த மூன்று பெண்களும் என்னை கீழே தள்ளிட்டாங்க! ஆனா.. வேதனையில் புலம்பும் நடிகர் தனுஷ்!!

நான் நம்பிய அந்த மூன்று பெண்களும் என்னை கீழே தள்ளிட்டாங்க! ஆனா.. வேதனையில் புலம்பும் நடிகர் தனுஷ்!!


thanush-talk-about-vetrimaran

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கைவசம் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் போன்ற திரைப்படங்கள் உள்ளன. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்.

அது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் இயக்குனர் வெற்றிமாறனுடனான நட்பு குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் எனது வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை வைத்த நான்கு பேரில் ஒருத்தர் வெற்றிமாறன். மற்ற மூன்று பேரும் பொண்ணுங்க. அவ்வளவு நம்பிக்கையை நான் யார் மேலேயும் வைத்தது இல்லை.

 மற்ற மூன்று பேரும் என்னை கீழே தள்ளி விட்டுட்டாங்க. எனது நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே மனிதர் வெற்றிமாறன்தான். அதைவிட பெரிய விஷயம், வெற்றியை சுவைத்ததற்குப் பிறகு என்னை மறந்து போன ஒருத்தரை எனக்கு தெரியும். அதை விட பெரிய வெற்றியை பார்த்த வெற்றிமாறன் தனுஷை விட்டு நான் வரமாட்டேன் என எப்பொழுதும் என் கூடவே உள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற சூப்பர் ஹிட்  திரைப்படங்களில் நடித்துள்ளார்.