"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
அடேங்கப்பா.. செம மாஸ்தான்! அமெரிக்காவில் வேற லெவலில் கெத்து காட்டும் நடிகர் தனுஷ்! இதை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் தற்போது ஹாலிவுட் சினிமாவில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில்உருவாகியுள்ள தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. மேலும் தி கிரே மேன் படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட் பிளிக்ஸில் வெளியாக உள்ளது.படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் அமெரிக்காவில் செம்ம மாஸாக, ஸ்டைலிஷாக
இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் அடுத்தடுத்ததாக ரிலீஸாகவுள்ளது.