Parenting Tips: குழந்தைகளின் உயிருக்கு எமனாகும் ஆன்லைன் கேம்ஸ்.. பெற்றோர்களே உஷாரா இருங்க.!
குழந்தைகள் மனத்தளவில் தனிமையில் இருந்தால், அவர்கள் மனநிம்மதிக்காக ஆன்லைன் கேமை விளையாடுகின்றனர். பின்னாளில் இதற்கு அடிமையாகி அவர்களின் உடல்நலத்தை கெடுத்து வருகின்றனர். இந்த விஷயம் மிகப்பெரிய நேரடி/மறைமுக விளைவுகளை ஏற்படுத்தும்.
புளூவேல் கேம்:
தற்போதுள்ள குழந்தைகளின் ஆன்லைனில் டாஸ்க் அடிப்படையிலான கேம்களை விரும்பி விளையாடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புளூ வேல் எனப்படும் டாஸ்க் அடிப்படையிலான கேம் பேசுபொருளான நிலையில், டாஸ்கை முடிக்க பலரும் தங்களின் உயிரையும் பணயம் வைத்து இருந்தனர். இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து, அதன்பேரில் உலகளவில் அந்த கேமுக்கு எதிரான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
தனிமை சிறார்கள் டார்கெட்:
இதனிடையே, தற்போது மீண்டும் இதுபோன்ற கேம்களை இளம் தலைமுறையினர் முழுநேரமாக விளையாடி வருகின்றனர். கேமில் ஒவ்வொரு லெவலுக்காக தங்களின் நேரத்தை செலவிட்டு தினமும் அதனை தவறாது விளையாடி வருவதால், உயிருக்கு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றனர். இந்த வகை கேம்களை அதிகளவில் தனிமையில் இருக்கும் சிறார்கள் விரும்பி விளையாடுகின்றனர். இவர்கள் விரக்தியில் இருப்பதால், தனிமை உணர்வை போக்க, மனஅழுத்ததில் இருந்து விடுபட அதனை தேர்வு செய்கின்றனர்.
இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!

புளூவேலுக்கு போட்டியாக ரோகிளாப்ஸ்:
முந்தைய ஆண்டுகளில் புளூவேல் கேம் இருந்ததைப்போல, தற்போது ரோபிளாக்ஸ் ஆன்லைன் கேம் பாதுகாப்பு குறைபாடுகளுடன், கேமை விளையாடும் நபரிடம் உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த கேமில் பிளேயர்கள் புதிய கேம்களை உருவாக்கி, தகாத காட்சிகளையும் செய்ய முடியும் என கூறப்படுகிறது. குழந்தைகள் இதன் அபாயத்தை உணராமல் இருக்கும் நிலையில், தனிமையில் இருக்கும் சிறார்கள் அதனை விளையாட தொடங்கி பின் விபரீதத்தில் சிக்குவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தங்களின் தனிப்பட்ட தகவலை பிறரிடம் பகிர கூடாது என பெற்றோர் சொல்லிக்கொடுப்பது நல்லது.
இதையும் படிங்க: 19 நிமிட அந்தரங்க வீடியோ.. நீங்கள் ஷேர் செய்தீர்களா?.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!