சினிமா

தங்கமீன்கள் படத்தில் நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம்!

Summary:

Thanga meengal actress sathana current photos

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களின் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் வெளியான அணைத்து படங்களும் ரசிகர்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தரமணி படத்திற்கு பிறகு பிரபல நடிகர் மம்மூட்டியை வைத்து பேரன்பு என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம்.

பேரன்பு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வெற்றியும் பெற்றுள்ளது. ராம் இயக்கிய படத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற படத்தில் ஓன்று தங்க மீன்கள். ஒரு ஏழ்மையான தந்தைக்கும், அவரது மகளுக்கும் இடையே இருக்கும் பாச போராட்டத்தை மையமாக கொண்டு உருவான இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த படத்தில் இயக்குனர் ராமுக்கு மகளாக செல்லமாவாக நடித்தவர் சாதனா. தங்க மீன்கள் படத்தில் அவர் நடிக்கும்போது அவருக்கு வயது 8 . தங்க மீன்கள் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் தங்கமீன்கள் படத்திற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார் சாதனா.

தற்போது அதே இயக்குநர் ராமின் பேரன்பு படத்தில் சாதனா ஒரு ஸ்பெஷல் சைல்டாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகளாக நடித்திருக்கிறார். இதில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பாப்பா. இந்த படத்தில் மாற்று திறனாளியாக நடிக்க மாற்று திறனாளிகள் உள்ள பள்ளியில் மூன்று மாதம் தங்கி அவர்களை புரிந்துகொண்டு அவர்களது கஷ்டத்தை இந்த படத்தில் தெளிவாக காட்டியுள்ளார் சாதனா.

தங்க மீன்கள் படத்தில் சிறு குழந்தையாக இருந்த இவர் தற்போது நன்கு வளர்ந்து பெரிய பெண் போல் காட்சியளிக்கிறார். இதோ இவரது தற்போதைய புகைப்படங்கள்.


Advertisement