பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
"கல்யாண வீட்டில் ஒப்பாரி வைத்த படக்குழு" துரத்தியடித்த கிராமத்தினர்..
"கல்யாண வீட்டில் ஒப்பாரி வைத்த படக்குழு" துரத்தியடித்த கிராமத்தினர்..

பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் ராம் சங்கையா இயக்கத்தில் வெளிவரவிற்கும் திரைப்படம் தான் 'தண்டட்டி'. பசுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா, ரோகினி, தீபா, செம்மலர் அன்னம் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே எஸ் சந்திரமூர்த்தி இசையமைத்த 'தண்டட்டி' திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர்,நடிகைகள், திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 'தண்டட்டி' படத்தின் கதாநாயகன் பசுபதி பேசிய போது, "சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் இப்படத்தின் கதையை கேட்டு பிடித்துப் போனதால் கதாநாயகனாக நடித்தேன். சிறந்த படத்திற்கான எல்லா தகுதியும் இந்த படத்தில் இருக்கின்றது" என்று கூறினார்.
மேலும், இப்படத்தில் இயக்குனர் ராம் சங்கையா மேடையில் பேசியதாவது, 'தண்டட்டி' படத்தின் படப்பிடிப்பு ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பிற்காக கிராமத்தினர் வீடுகளை கேட்டோம். அதில் ஒருவர் வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு படப்பிடிப்பு எடுக்கப்பட்டபோது ஒப்பாரி காட்சியை படமாக்கியதால் வீடு தர மறுத்து விட்டனர். இதனால் அந்த காட்சியை படமாக்க மிகவும் கஷ்டப்பட்டோம் என்று கூறியிருக்கிறார்.