ரசிகர்களுக்கு குட் நியூஸ்... நடிகை சாய் பல்லவியின் தண்டேல் படத்தின் ஓடிடி ரிலீஸ்.... எப்போது தெரியுமா?



Thandal  movie release date

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியளவில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மிகவும் எளிமையாக இருக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சாய் பல்லவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

அதை தொடர்ந்து ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் தான் தண்டேல். சண்டூ மொண்டேட்டி இயக்கத்தில் உருவான இப்படத்தை அல்லு அரவிந்த் தயாரித்திருந்தார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து நாகசைதன்யா நடித்திருந்தார். திரையரங்குகளிள் ஓரளவிற்கு தண்டேல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது தண்டேல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வருகிற மார்ச் 7ம் தேதி முதல் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் ஓடிடியில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: உடல்நிலை சரியில்லாமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவிக்கும் பிரபல நடிகை... ஓடிப்போய் உதவிய காமெடி நடிகர்... வைரலாகும் வீடியோ காட்சி....

இதையும் படிங்க: நடிகை ஆண்ட்ரியாவா இது! மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் வைரல் புகைப்படங்கள்