உடல்நிலை சரியில்லாமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவிக்கும் பிரபல நடிகை... ஓடிப்போய் உதவிய காமெடி நடிகர்... வைரலாகும் வீடியோ காட்சி....



comedy-actor-helping-video

 

80ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த பிரபலமான நடிகை பிந்து கோஷ்.

இவர் தற்போது வயதான நிலையில் உடல்நலை சரியில்லாமல் மேலும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டம் அனுபவிப்பதாக பேட்டிகளில் கண்கலங்கி பேசியிருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு உதவி செய்த நடிகர்கள் கூட தற்போது கண்டுகொள்வது இல்லையாம். மேலும் இவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அதில் மூத்த மகன் அம்மாவை பார்த்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டு பெங்களூரில் உள்ளார். மேலும் இரண்டாவது மகன் தான் தன்னை பார்த்துக் கொள்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகை ஆண்ட்ரியாவா இது! மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் வைரல் புகைப்படங்கள்

இந்த நிலையில், பிந்து கோஷின் நிலைமை குறித்து நடிகை ஷகீலா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் . இதில் சினிமா துறையின் மூலம் நம்மை சிரிக்க வைத்த பிந்து கோஷ் இப்போது சாப்பிட கூட வழியில்லாமல் இருக்கிறார். அவர் வாழ்வதற்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிந்து கோஷுக்கு உதவ KPY பாலா முன் வந்துள்ளார். தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும் KPY பாலா தற்போது பிந்து கோஷுக்கு ரூ. 80 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளார். பாலாவை பிந்து கோஷிடம் அழைத்து சென்றது ஷகீலா தான். KPY பாலா பிந்துகோஷ் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து “உங்களை நான் சின்ன வயசில் சினிமாவில் பார்த்திருக்கிறேன் அம்மா, இப்போ உங்களை இப்படி பாக்குறதுக்கு எனக்கே கஷ்டமா இருக்கு..” என்றும் பேசியுள்ளார். பிந்துவுக்கு பாலா யார் என்றே தெரியவில்லை ஆனாலும் பாலாவை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி இருக்கிறார். மேலும் மருத்துவ செலவிற்கு பணம் வேண்டுமென்றாலும் என்னை கூப்பிடுங்கள் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது...

இதையும் படிங்க: #Breaking: நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!