சினிமா

திரில்லிங்கான அனுபவம்! கொரோனாவை பொருட்படுத்தாமல் திடீரென வெளிநாட்டிற்கு பறந்த அழகு சீரியல் நடிகர்! ஏன் தெரியுமா?

Summary:

Thalivasal vijay talk about foreign travel experience in corono days

1992ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான தலைவாசல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் விஜய். அதனை தொடர்ந்து அவர் தலைவாசல் விஜய் ஆனார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்துள்ளார்.

மேலும் சினிமா மட்டுமின்றி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில் அவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாருடன் இணைந்து பெல் பாட்டம் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அனைவரும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு நேற்று மும்பையில் இருந்து புறப்பட்டனர். 

இந்நிலையில் கொரோனா  காலத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்ட அனுபவம் குறித்து தலைவாசல் விஜய் கூறியதாவது, 

இந்த பயணம் தனித்துவம் நிறைந்த ஒரு த்ரில்லிங்கான அனுபவம். விமான நிலையத்தில் உள்ள அனைவரும் பிபிஇ சூட்ஸுடன் பயோவார் மண்டலத்தில் இருப்பது போன்று இருந்தனர். முன்பு போன்று, விமானத்தில் எங்களை யாரும் வரவேற்கவில்லை.

மேலும் நாங்களே எங்களது பொருட்களை ஹோட்டலுக்கு எடுத்துச் சென்றோம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு பரிசோதனைக்கு பிறகே படப்பிடிப்பு தொடங்கும். மேலும் செட்டில் பல மருத்துவர்களும் உள்ளனர் என கூறியுள்ளார். 


Advertisement