சினிமா

இவர்தான் விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர்! வெளியான மாஸ் தகவல். உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

Summary:

Thalapathy 65 to be directed by thatam movie director

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை பிகில் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் விஜய். மாநகரம், கைதி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் படத்தில் தளபதி நடித்துவருவது தளபதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தளபதி 64 படத்தை அடுத்து தளபதி 65 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக பிரபல நாளிதழ் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது. அருண் விஜய் நடித்த தடம் என்ற அதிரடி த்ரில்லர் படத்தை இயக்கியவர்தான் இயக்குனர் மகிழ் திருமேனி.

விஜய் - மகிழ் திருமேனி இருவரும் ஏற்கனவே படத்தின் கதை குறித்து பேசிவிட்டதாகவும், கதை விஜய்க்கு பிடித்துப்போக படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டும் உண்மையானால் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் மெகாஹிட் வெற்றிபெறப்போவது உறுதி என விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். 


Advertisement