என்னது.. சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் ஸ்டார்களா.! இப்படி மிஸ் ஆகிருச்சே!! வெளிவந்த தகவல்!!

என்னது.. சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் ஸ்டார்களா.! இப்படி மிஸ் ஆகிருச்சே!! வெளிவந்த தகவல்!!


thalapathi-vijay-first-fixed-for-act-in-sandakozhi-movi

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். மேலும் இதில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதில் கதாயாகியாக, விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ராஜ் கிரண், லால், கஞ்சாகருப்பு, தென்னவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சண்டக்கோழி படம் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

vijay

இந்த படத்தில் நடிக்க முதலில் நடிகர் விஜய்யிடம் கேட்கப்பட்டதாம். ஆனால் அப்போது விஜய் பல படங்களில் கமிட்டாகி இருந்ததால் அவர் சண்டக்கோழி படத்தின் கதையை கூட கேட்காமல் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகே விஷால் இப்படத்தில் நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் ஹீரோயினாக நடிக்க நடிகை தீபிகா படுகோனிடம் கேட்டதாகவும், அவராலும் சில காரணங்களால் நடிக்கமுடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.