சினிமா

Thala#59: "அஜித்துடன் நடிக்கபோகிறேனா..!" உற்சாகத்தில் பிரபல நடிகை

Summary:

Thala#59 heroine

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். தேசிய விருது வாங்கிய இந்தி படமான பிங்கின் தமிழ் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கப் போகிறார். அஜித், வினோத் இணையும் படம் பிங்க் ரீமேக் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த படத்தை  ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. 

இது பிங்க் படத்தின் ரிமேக் என்றாலும் முழுக்க முழுக்க வித்தியாசமாக தமிழ் திரைப்படங்களின் பாணியில் தான் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க நடிகை நஷ்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நஷ்ரியா தமிழ் படத்தில் அதுவும் அஜித்துடன் நடிக்க இருப்பதில் மிகவும் உற்சாகத்தில் உள்ளார். 


Advertisement