மலேசியாவில் விஸ்வாசம் வெற்றி கொண்டாட்டம்! அட்டகாசமான செயலால் அசத்திய தல ரசிகர்கள்.!

மலேசியாவில் விஸ்வாசம் வெற்றி கொண்டாட்டம்! அட்டகாசமான செயலால் அசத்திய தல ரசிகர்கள்.!


thala-fans-donate-foos-for-celebration

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகி  பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 உலகம் முழுவதும் வெளியான படம் விஸ்வாசம். 

இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  மேலும் இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களும் நிறைந்த இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
 
மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் என்றும் இதனை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இப்படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்களும், படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்நிலையில் வெளிநாடுகளிலும் விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும்  மலேசியாவில் பெருமளவில் உள்ள அஜித் ரசிகர்கள் 80 பேருக்கு உணவு வழங்கி விஸ்வாசம் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.