சினிமா

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராசாத்தி சீரியல் நடிகர்! சோகத்தில் திரைத்துறையினர்!

Summary:

Thainnavan

1990 ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என் உயிர் தோழன் என்ற திரைப்படத்தில் ஹுரோவாக அறிமுகமானவர் நடிகர் தென்னவன். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் ஜெமினி, விருமாண்டி, சண்டக்கோழி, சுந்தரபாண்டியன், வாகைசூடவா போன்ற படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். தற்போது இவர் வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையிலும் ஜொலித்து வருகிறார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் தென்னவன் மூளையில் பாதிப்பு ஏற்ப்பட்டு சென்னையில் உள்ள பொத்தேரி எஸ்ஆர்எம் மருந்து மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நமல் பெற வேண்டி திரைத்துறையினர் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 


Advertisement