தமிழகம் சினிமா

தன் மகளை சந்திக்கவும் கட்டுப்பாடு தாடி பாலாஜிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Summary:

thadi balaji - family problem - daughter meet - court order

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் தாடி பாலாஜி. இந்நிலையில்தான் தாடி பாலாஜிக்கு அவரது மனைவி நித்யாவுக்கும் சண்டை என்று தமிழகம் முழுவதும் அந்த செய்தி வைரலாக பரவியது.

இந்நிலையில்தான் பாலாஜிக்கும், நித்யாவுக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேரும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் காட்டப்பட்டதை வைத்து இருவரும் ஓன்று சேர்ந்துவிட்டதாக மக்கள் நம்பினர்.

ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர்கள் தற்போது மீண்டும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், தாடி பாலாஜி நீதிமன்றத்தில் தனது மகள் போஷிகா தன் பாதுகாப்பில் வளர வேண்டும். அவரது படிப்புச் செலவை எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்வதாகவும் கூறி அனுமதி கோரினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வாரம் ஒரு முறை மட்டுமே பாலாஜியின் அம்மாவின் வீட்டில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை மகள் போஷிகாவை பார்க்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement