சினிமா

வாட்சப் குரூப்பில் மானத்தை வாங்கும் தாடி பாலாஜி! காவல் நிலையத்தில் மனைவி மீண்டும் புகார்!

Summary:

Thaadi balaji wife again complaint about balaji

தனது கணவர் தாடி பாலாஜி தன்னையும், தனது மகளையும் குடித்துவிட்டு கொடுமை படுவதாக தாடி பாலாஜி மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் பாலாஜியும், நித்யாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரையும் பலர் சேர்ந்து சமாதானப்படுத்தி ஒருவழியாக ஒன்றுசேர்ந்தனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததாகவும், அடுத்த ஓரிரு நாட்களிலையே தாடி பாலாஜி மீண்டும் தண்ணி அடித்துவிட்டு தன்னையும், தனது மகளையும் கொடுமைப்படுத்தியதாகவும், தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவந்து தங்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் தாடி பாலாஜி மனைவி நித்யா.

 மேலும் என்னை பற்றி தவறாக அவரும் அவர் நண்பர்களும் வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அவமானப்படுத்துகின்றனர். தற்போது புதிய பெண்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் தலைவியாக உள்ளேன். இது அவருக்கு பிடிக்கவில்லை. உனக்கு என்ன தகுதி இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிடு என்று கூறி தன்னிடம் சண்டைபோடுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார் தாடி பாலாஜி மனைவி நித்யா.


Advertisement