
Thaadi balaji talks about the issue with his wife nithya press meet
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் தாடி பாலாஜி. இந்நிலையில்தான் தாடி பாலாஜிக்கு அவரது மனைவி நித்யாவுக்கும் சண்டை என்று தமிழகம் முழுவதும் அந்த செய்தி வைரலாக பரவியது.
இந்நிலையில்தான் பாலாஜிக்கும், நித்யாவுக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேரும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் காட்டப்பட்டதை வைத்து இருவரும் ஓன்று சேர்ந்துவிட்டதாக மக்கள் நம்பினர்.
ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர்கள் தற்போது மீண்டும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், தனது தரப்பில் உள்ளார் நியாத்தை கூற தாடி பாலாஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.
அந்த சந்திப்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தாடி பாலாஜி பிக்பாஸ் செட்டில் நித்யா நடத்தியது அனைத்தும் நடிப்பு என்றும் , பிக்பாஸ் செட்டிலிருந்து வந்த பின்னர் நித்யா தன்னுடன் வாழவில்லை, கடந்த இரண்டு வருடமாக தன்னுடைய அம்மா வீட்டில் தான் வசித்து வருவதாக பாலாஜி கூறினார்.
மேலும் தனது மனைவியால் தனது குழந்தை போஷிகாவின் வாழ்க்கை பாதிப்படைவதாகவும், தனது மனைவி நித்யா உதவி ஆய்வாளர் மனோஜ் என்பவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார் தாடி பாலாஜி.
Advertisement
Advertisement