சினிமா

தாடி பாலாஜி மதம் மாறியதாக கூறிய அனைத்தும் பொய்யா? அவரே கூறிய உண்மை தகவல்!

Summary:

Thaadi balaji religion conversion real status

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், பிரபலதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிக்கு  நடுவராகவும் இருப்பவர் தாடி பாலாஜி. இவர் சமீபத்தில்  கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்..

இவர் தனது மனைவியை, கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். மேலும் கடந்த வருடங்களில் தாடி பாலாஜியின் மீது பல தவறான விமர்சனங்கள் எழுந்தது. பின்னர் நாளடைவில் அந்த  விமர்சனங்கள் மாறியது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாடி பாலாஜி மன நிம்மதியை தேடி மதம் மாறியதாகவும், தற்போது மீண்டும் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது இது முற்றிலும் தவறான தகவல் என கூறியுள்ளார். மேலும் ”நான் மதம் மாறவில்லை என்றும் எனக்கு சித்தர்கள் மீது ஆர்வம் அதிகம்.

அவர்கள் என் வாழ்வில் பல அற்புத விஷயங்களை செய்துள்ளனர். திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தரை சந்தித்த பிறகுதான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது” என பாலாஜி தெரிவித்துள்ளார்.


Advertisement