பிரபல நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கிய தயாரிப்பாளர் சங்கம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?Tamil cinema actors got red card

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களாக வலம் வருபவர்கள் தனுஷ், விஷால், சிம்பு மற்றும் அதர்வா பல்வேறு வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து முன்னணி நடிகர்களாக தமிழ் சினிமாவில் பெயர் பெற்றிருக்கின்றனர்.

danush

இதுபோன்ற நிலையில், தனுஷ், விஷால், சிம்பு மற்றும் அதர்வா போன்ற பிரபல நடிகர்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு வழங்கியிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

இதன்படி நடிகர் தனுஷிற்கு ரெட் கார்டு வழங்கியதன் காரணமாக கூறப்படுவது, இவர் 80% படம் முடிவடைந்து நிலையில் படப்பிடிப்பிற்கு வருவதற்கு மறுப்பதால் ரெட்கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிம்புவிற்கு மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை காரணமாக காட்டி வழங்கப்பட்டுள்ளது.

danush

இதன்படி விஷாலிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதன் காரணமாக கூறப்படுவது, இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது பணத்தினை முறையாக கையாளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதர்வா ஒரு சில படங்களில் பணத்தினை வாங்கி விட்டு நடிக்க மறுத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரபல நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.