தமிழகம் சினிமா

நடிகர் விஷால் மீண்டும் கைதா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களால் பெரும் பரபரப்பு.!

Summary:

tamil actor sangam - producer association - actor vishal

நடிகர் விஷால் மீண்டும் கைது செய்யப்பட்டது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இதனால் இவரை மையமாக கொண்டு தற்போது நிறைய பிரச்சினைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

photos are spreading rumours in social media about actor vishal arrests again

இதனால் பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க பிரச்சனை காரணமாக சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவருடைய திருமணம் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,  

மீண்டும் கைது செய்யப்பட்டது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த புகைப்படங்கள் தற்போது விஷால் நடித்து வரும்  ‘அயோக்யா’ படத்தில் இடம்பெறும் காட்சிகள் என்று சினிமா விமர்சகர்களால் விளக்கப்பட்டுள்ளது.


Advertisement