விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
நான் மட்டும் ஹீரோயின் ஆகலைனா, கண்டிப்பாக இந்த வேலை தான் செஞ்சிருப்பேன்.! ஷாக் கொடுத்த நடிகை தமன்னா!!
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனை தொடர்ந்து அவர் கல்லூரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் படிக்காதவன், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி என பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அவரது நடிப்பில் வெளிவந்த தேவி திரைப்படம் பெரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம் சினிமாவில் நடிக்கவில்லை என்றால் வேறு என்ன வேலைக்கு சென்று இருப்பீர்கள்?என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமன்னா நடிப்பை தவிர வேறு எதையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் ஒருவேளை நடிகை ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக மருத்துவராகி இருப்பேன்.
மேலும் எனது குடும்பத்தினர் அனைவரும் இந்த துறையில்தான் அதிகம் உள்ளனர். நிச்சயம் அவர்களைப் பின்பற்றி நான் மருத்துவர் ஆகியிருப்பேன் என தமன்னா கூறியுள்ளார்.