அட.. சாமியாராகவே மாறிட்டாரே.! நடிகை தமன்னா வெளியிட்ட வீடியோ.! ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

அட.. சாமியாராகவே மாறிட்டாரே.! நடிகை தமன்னா வெளியிட்ட வீடியோ.! ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!


tamanna-pooja-to-god-video-viral

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து அவர் கல்லூரி என்ற படத்தில் நடித்தபோது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் வர துவங்கிய நிலையில் அவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நடிகை தமன்னா தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகை தமன்னா சமீப காலமாக ஆன்மீக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் ஷூட்டிங் இல்லாத நாட்களில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.. சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இமயமலையில் ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.  மேலும் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கும் சென்று தரிசனம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அதில் அவர் சாமியார் தோற்றத்தில் ஈஷாவில் உள்ள லிங்கபைரவி கோவிலுக்கு ஆத்மாத்மமாக பூஜை செய்துள்ளார். மேலும் அதில் லிங்க பைரவி கோவிலை குறித்து உணர்ச்சிகரமாகவும் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கண்ட நடிகை சமந்தா பைரவி தேவி எனவும், நடிகை காஜல் அகர்வால் சாமி கும்பிடுவது போன்ற எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளனர்.