தமன்னாவின் உதவியாளர்களுக்கே இவ்வளவு சம்பளமா.? தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு போட வைக்கும் தமன்னாவின் செயல்.!

தமன்னாவின் உதவியாளர்களுக்கே இவ்வளவு சம்பளமா.? தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு போட வைக்கும் தமன்னாவின் செயல்.!



Tamanna latest news about her salary details

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு பாராட்டை பெற்று தந்தது.

tamanna

இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை நிலைநாட்டியிருக்கும் தமன்னா, தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்ட தமன்னா தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் இந்தி மொழி சினிமாக்களின் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவ்வாறு சமீபத்தில் இவர் நடித்த வெப்சீரிஸ் மிகவும் சர்ச்சையான விமர்சனங்களை பெற்றது.

tamanna

இதனை அடுத்து தமன்னாவின் சம்பள விவரம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இவரது உதவியாளர்களுக்கு 1.50 லட்சம் சம்பளம் தயாரிப்பாளர் கையில் இருந்து கொடுத்து வருகிறாராம். தமன்னா ஒரு படத்தில் நடிப்பதற்கு மட்டுமே இரண்டு கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் இவ்வாறு தமன்னா படத்தில் நடிக்க பல நிபந்தனைகளை விதிக்க விதித்து வருவதால் தயாரிப்பாளர்களுக்கு தலைமையில் துண்டு போட்ட கதையாக இருக்கின்றது என்று திரை வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.