"15 வயசுலயே எல்லாத்தையும் பாத்துட்டேன்" முன்னாடி நடிகை தமன்னாவின் ஓபன் டாக்..



Tamanna latest interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் முதல் முதலில் 'கேடி' திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் தமன்னாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

tamanna

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் தனது நடிப்பு திறமையின் மூலம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

சில வருடங்களாக தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார் தமன்னா. தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெய்லர்' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற காவலா பாடலில் தமன்னாவின் நடனம் மிகவும் பிரபலமடைந்தது.

tamanna

இது போன்ற நிலையில், சமீபத்தில் யூ ட்யுப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த தமன்னாவிடம் ஆபாச திரைப்படம் எந்த வயதில் பார்த்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமன்னா "நான் பள்ளி படிக்கும்போது ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே படம் பார்க்கலாம் என்று ஒரு சிடியை எடுத்து போட்டோம். ஆனால் அது அடல்ட் வீடியோ. அப்போது பார்த்தது தான். பள்ளி பருவத்திலேயே எல்லாத்தையும் பாத்துட்டோம்" என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.