சினிமா

தன்னை விட 16 வயது குறைவான இளைஞன், ரட்சகன் நாயகி செய்த செயலால் அதிர்ச்சியில் திரையுலகம்.!

Summary:

sushmitha sen love with 16 year younger boy

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்,தன்னை விட 16  வயது குறைந்த 27 வயது மாடல் ஒருவரை காதலிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இந்தியா சார்பில் முதன் முதலாக உலக அழகி பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென், தமிழ்சினிமாவில் நாகர்ஜூனுக்கு ஜோடியாக ‘ரட்சகன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்,பின்னர்  ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

தற்போது 43வயதாகும் நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் ரெனீ சென், அலிஸா சென் ஆகிய இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில்  சுஷ்மிதா, உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாடல், ரொமன் ஷால் என்பவருடன் நெருக்கமாக பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் இருவரும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றியது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த வதந்திகளை உறுதிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக காதல் சின்னமாக தாஜ் மஹாலுக்கு சென்றுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் தனது வாழ்வின் காதல் என்று குறிப்பிட்டுள்ளதால் இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரோமனுக்காக ஏற்கனவே நட்சத்திர ஹோட்டல் உரிமையாளருடனான உறவை சுஷ்மிதா சென் முறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement