சினிமா

செம கெத்துதான்! கையில் வாளுடன் என்னவொரு கம்பீரம்! ட்ரெண்டாகும் நடிகர் சூர்யாவின் மாஸ் புகைப்படம்!!

Summary:

சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்ச

சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா முழுவதும் குணமடைந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு தீவிரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் கையில் வாளுடன் சூர்யா கம்பீரமாக நடப்பது போன்று உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்த புகைப்படம் வெளியாகி சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் பெருமளவில் டிரெண்ட்டாகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
    


Advertisement