சினிமா

இந்திய மக்களின் ஒரே நம்பிக்கை! உங்கள் உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்! நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு!

Summary:

Surya tweet about chennai highcourt order

நீட் தேர்வு அச்சத்தால் சமீபத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சூர்யா  நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது எனது மனசாட்சியை உலுக்குகிறது. 

அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி எம்.எஸ் சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை  என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நம்முடைய மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான். சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Advertisement