என்னது! நடிகர் சூர்யாவின் இந்த படம் கைவிடப்பட்டதா? வெளியான தகவலால் செம அப்செட்டில் ரசிகர்கள்!

Surya aruva movie dropped by corono spreading


Surya aruva movie dropped by corono spreading

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சூர்யா. அவர் தற்போது சுதா கே.பிரசாத் இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து  திரைக்கு வர தயாராக உள்ளது. 

அதனைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வாடிவாசல் என்ற படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

surya

இதற்கிடையில் நடிகர் சூர்யா  ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் கூட்டணியில் இணைந்து அருவா என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அசுர வேகத்தில் பரவிவரும்  கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு  காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை எனவும் அதனால் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  ஆனால் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. ஆனாலும் ரசிகர்கள் பெரும் அப்செட்டில் உள்ளனர்.