சினிமா

ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் சூர்யாவின் மகன்! வெளியானது அதிரடி அறிவிப்பு!

Summary:

Suriya son acting in new movie

நட்சத்திர தம்பதிகள் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன் ஒருபடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. பிரபல நடிகர் சிவகுமாரின் மகனான இவர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார்.

அதேபோல் தமிழில் முன்னணி நாயகியாக வலம்வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து அதன்பின்னர் பல்வேறு எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் புதுமுக இயக்குனர் ஒருவர் ஒரு சிறுவன் மற்றும் நாய்க்குட்டிக்கு இடையே உள்ள பாசம் பற்றி படம் இயக்க உள்ளதாகவும், அதற்கு சூர்யா, ஜோதிகா மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

படத்தின் கதை பிடித்திருந்தாலும், அதற்குள் மகனை படத்தில் நடிக்கவைப்பதா என சூர்யா, ஜோதிகா யோசித்து வருவதாக கூறப்படுகிறது.


Advertisement