சூர்யா அடுத்தாக இந்த மாஸ் இயக்குனருடன் இணைகிறாரா! நடிகர் கார்த்தி ஓபன் டாக்!

சூர்யா அடுத்தாக இந்த மாஸ் இயக்குனருடன் இணைகிறாரா! நடிகர் கார்த்தி ஓபன் டாக்!


suriya-hari

தமிழ்சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான என் ஜி கே படம் படுதோல்வியை சந்தித்தது.

அதனைத்தொடர்ந்து வெளியான காப்பான் திரைப்படமும் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அமையுமென கருதப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் காணப்பட்டது.

Suriya

இந்நிலையில் சூர்யாவின் தம்பி கார்த்தி அவர்கள் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா அடுத்ததாக ஹரியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் சூர்யா- ஹரி கூட்டணி என்றால் மாஸ் ஆகத்தான் இருக்கும். மேலும் இந்த படம் நடிகர் சூர்யாவுக்கு கண்டிப்பாக ஒரு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.