தேவராட்டம் படத்தின் மூலம் கெளதம் கார்த்திக்கிற்கு கிடைத்த அட்டகாசமான புதிய பட்டம்! என்ன தெரியுமா?

தேவராட்டம் படத்தின் மூலம் கெளதம் கார்த்திக்கிற்கு கிடைத்த அட்டகாசமான புதிய பட்டம்! என்ன தெரியுமா?


sur-name-for-gowtham-karthick

தமிழ்சினிமாவில் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இதனை தொடர்ந்து அவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, சிப்பாய், இந்திரஜித், இருட்டுஅறையில் முரட்டு குத்து என பல படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கார்த்திக் தற்பொழுது குட்டிபுலி படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, முனீஸ் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

gowtham karthik

 மேலும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது தேவராட்டம் திரைப்படம் மே 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்பொழுது பேசிய இயக்குனர் முத்தையா, தேவராட்டம் சாதி படம் கிடையாது.  அது முற்றிலும் உறவுகள் சம்பந்தப்பட்ட படம் என்று கூறினார்.மேலும் தேவராட்டம் படத்தின் மூலம் கௌதம் கார்த்திக்கு நவரச இளவரசன் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.